திருவள்ளூர் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் திட்டம்!!- எஸ் .பி. அதிரடி !!

     -MMH


     திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பளர் அரவிந்தன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, சூதாட்டம், போலி மதுபானங்கள் விற்பனை, மணல் கொள்ளை மற்றும் செம்மரக்கட்டை கடத்தல் போன்ற குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக 'ஹலோ போலீஸ்' சேவை என்ற திட்டத்தை எஸ்.பி. அரவிந்தன் தொடங்கி வைத்தார். இது போன்ற குற்றங்களைப் பற்றி பொதுமக்கள் யாரேனும் புகார் அளிக்க விரும்பினால் 90033 90050 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ்அ ப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என்றும், புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்த எஸ்.பி. அரவிந்தன் அது சம்பந்தமான வீடியோ தயார் செய்து வெளியிட்டுள்ளார். இந்த ஹலோ போலீஸ் சேவை திட்டத்திற்காக எஸ்.பி. அலுவலகத்தில் பிரத்யேகமாக கன்ட்ரோல் ரூம் உருவாக்கப்பட்டு இந்த எண்ணில் வரும் புகார்கள் மீது சிறப்பு காவல் துறையினர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றங்களை குறைக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு எஸ்.பி. அரவிந்தன் கேட்டுக் கொண்டார்.


-பீர் முஹம்மது,குறிச்சி.


Comments