பராமரிக்கப் படாத நியாய விலைக் கடை!! - மக்கள் அவதி!!

     -MMH


     தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள கலப்பம்பாடி ஊராட்சியில் ஒண்டிக்கோட்டை என்னும் கிராமத்தில் நியாய விலை கடையில் இணையதள சமிக்ஞை (Signal) கிடைக்காத காரணத்தால் கடையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து மக்கள் தங்களின் ரசிதைப் பெற்றுக்கொண்டு மீண்டும் 1.5 கிலோமீட்டர் தூரம் நடந்து நியாய விலை கடைக்கு சென்று தங்களின் பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும், நியாய விலை கடையில் மின்சார இணைப்பும் இல்லை. கட்டிடமும் முறையாக இல்லாத காரணத்தால் ஊர் மக்களின் சார்பில் செலவு செய்து கட்டிடத்தை பராமரிப்பு செய்து உள்ளனர். ஒண்டிக்கோட்டை நியாய விலை கடையை பராமரிப்பு செய்ய யாரும் எந்த ஒரு நிதியுதவியும் வழங்குவதில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


-சோலை,சேலம்.


Comments