கோவையில் கொரோனா தொற்றின் நிலவரம்..!

         -MMH


   தமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 5,495 பேருக்கு பாதிப்பு6,227 பேர் டிஸ்சார்ஜ் : தமிழகத்தில் இன்று மேலும் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது.


  தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்து மேலும் அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,91,571 ஆக இருந்தது.


   இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5,495 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், தமிழகத்தில் இன்று மட்டும் 6,227 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 4,41,649 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 8,307 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


   இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பரிசோதனை மையங்கள் மூலம் 58 லட்சத்து 03 ஆயிரத்து 778 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 978 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,47,591 ஆக அதிகரித்துள்ளது.


   அதேபோல, கோவையில் இன்று மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21,665 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நீலகிரியில் புதிதாக 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,279 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,446 ஆக உயர்ந்துள்ளது.


-ஸ்டார் வெங்கட்.


Comments