திருப்பூர் மற்றும் சேலம் மாவட்ட சாரணர் இயக்கங்களுக்கு கோவிட் வாரியர் விருது!!

      -MMH 


     கோவிட் வாரியர் விருது!


     திருப்பூர்:கொரோனா ஊரடங்கின்போது, சிறப்பாக பங்காற்றிய சாரண இயக்க பட்டியலில் திருப்பூர், சேலம் மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன.


     கொரோனா ஊரடங்கில், வாழ்வாதாரம் இன்றி தவித்த பொதுமக்களுக்கு உணவுபொருட்கள், காய்கறி, மருத்துவ பொருட்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பணியில், சாரணர் இயக்கங்கள் ஈடுபட்டன. நாடு முழுவதும் சிறப்பாக செயலாற்றிய, 70 சாரணர் இயக்கங்களின் பட்டியலை, 'பாரத சாரண, சாரணியர் இயக்கம்' வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் திருப்பூர் மற்றும் சேலம் மாவட்ட சாரணர் இயக்கங்கள் தேர்வாகியுள்ளன. இவர்களுக்கு ஹரியானாவில் உள்ள தேசிய இளைஞர் வளாகத்தில், 'கோவிட் வாரியர்' விருது வழங்கப்படுகிறது.திருப்பூர் சாரணர் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட பயிற்சி கமிஷனர் சுதா லட்சுமி, மாவட்ட இணை செயலாளர் பொன்சங்கர் ஆகியோர் இந்த விருதை பெற்று கொள்கின்றனர்.


-சோலை, சேலம்.


Comments