மொபைல் போன் திருடனை விரட்டி பிடித்த வாகன ஓட்டி !!

     -MMH


      பல்லடம்:அடுத்தடுத்து மொபைல் திருட்டில் ஈடுபட்ட வழிப்பறி ஆசாமி ஒருவரை, வாகன ஓட்டி ஒருவர் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.


     பல்லடம், செட்டிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் பிரபு, 23. பனியன் தொழிலாளி. நேற்று மதியம், 1.30க்கு - திருச்சி ரோட்டில், மொபைல் போனில் பேசியபடி நின்றிருந்தார்.அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், அவரது மொபைல் போனை பறித்துக்கொண்டு பைக்கில் பறந்தார். இது குறித்து பிரபு, பல்லடம் போலீசில் புகார் தெரிவித்தார்.


     மொபைல் போனுடன் மாயமான வழிப்பறி ஆசாமி, கோவை மாவட்டம், அப்பநாயக்கன்பட்டியில், இதேபோல் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த பெரியவர், மற்றும் சூலூர் பாப்பம்பட்டி பிரிவில் நின்றிருந்த வாகன ஓட்டி ஒருவரிடமும் மொபைல் போனை பறித்தார்.தப்பிக்க முயன்ற வழிப்பறி ஆசாமியை வாகன ஓட்டி ஒருவர் விடாமல் துரத்தினார். ஒரு கட்டத்தில், எதிரே வந்த டூவீலர் மீது மோதிய வழிப்பறி ஆசாமி காயமடைந்தார்


     ஆம்புலன்ஸில் ஏற்றி செல்ல முயன்றபோது, ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் அவர் வைத்திருந்ததை கண்டு, ஆம்புலன்ஸ் டிரைவர் சந்தேகமடைந்து விசாரிக்க, வழிப்பறி ஆசாமி தப்பிக்க முயன்று ஒட்டமெடுத்தார். அப்பகுதி பொதுமக்கள், விரட்டி பிடித்து, அவரை சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இது குறித்து சூலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்


நாளயவரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments