இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து, எஸ்.ஆர்.எம்.யூ ஆர்ப்பாட்டம்..!

    -MMH


   இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் கோவை ரயில்வே பணிமனையில் வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


    ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிவிட்டர் மூலமாக தேசத்தை காப்போம் , ரயில்வே துறையை காப்போம் என்ற வாசகத்துடன் ரயில்வே அமைச்சருக்கு செய்தி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


    இந்நிலையில் கோவை கூட்செட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிபனையில் எஸ்.ஆர்.எம்.யூ மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் டி.ஏ முடக்கப்பட்டதை வாபஸ் பெற வேண்டும், ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவது, ரயில் ஓட்டுநர் (லோகோ பைலெட்) தனியார் மூலம் தேர்ந்தெடுப்பது, 50 % பணிகளை தனியாருக்கு வழங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகக்கவசம் , சமூக இடைவெளியுடன் நடந்த போராட்டத்தின் போது பேசிய நிர்வாகிகள் மத்திய அரசு தனியார் மயக்கொள்கையை கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.


-சீனி,போத்தனூர்.


 


Comments