கும்பகோணம் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் பரிதாப பலி!

     -MMH


  கும்பகோணம் காவிரி ஆற்றில் ஆணின் பிணம். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா கோடையான் தோட்டம். அன்னை அஞ்சுகம் நகர் அருகிலுள்ள காவிரி ஆற்றில்  அப்பகுதியை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி வயது 33 என்பவர் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் குளிக்கச் சென்றுள்ளார் சென்றவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் வீட்டிலுள்ளவர்கள் ஆற்றுக்கு தேடி சென்றுள்ளனர்.தேடிக் கிடைக்காத நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்பு துறையினர்  மீட்டெடுத்தனர். இறந்த நிலையில் இருந்தவருக்கு வலிப்பு நோய் இருப்பது  குறிப்பிடத்தக்கது.


-வினோத்  குமார்  கும்பகோணம்.


Comments