முப்போகம் விளைந்த ஆயக்கட்டு நிலங்கள்!! - அரசு உதவினால் வளமை தொடரும் வாய்ப்பு!!

     -MMH


     முப்போகம் விளைந்த ஆயக்கட்டு நிலங்கள் பசுமைக்கு தயார்! அரசு உதவினால் வளமை தொடரும் வாய்ப்பு!!!!


     அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கல்லாபுரம் பகுதியில், நெல் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொள்முதல் மையம், உலர் களம் ஆகிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால், முப்போகம் நெல் விளைந்த, கல்லாபுரத்தின் வளமை மாறாமல், பாதுகாக்கப்படும் என, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


     உடுமலை அமராவதி அணையிலிருந்து, கல்லாபுரம் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு, அப்பகுதியில், நெல் சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. உடுமலை தாலுகாவின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் வகையில், முன்பு, மூன்று போகங்களில், அப்பகுதியில், நெல் விளைந்தது.


     பல்வேறு காரணங்களால், அங்கும், நெல் சாகுபடி பரப்பு குறைந்து, தென்னை உட்பட மாற்றுப்பயிருக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.அமராவதி அணையிலிருந்து தாமதமான தண்ணீர் திறப்பு காரணமாக, சம்பா சீசனுக்கான பணிகள் காலம் தள்ளி, தற்போது தீவிரமடைந்துள்ளது.பாரம்பரிய மற்றும் இயந்திர நெல் நடவு முறையில், நாற்று நடவு நடக்கிறது.


     இந்நிலையில், தற்போதைய சீசனுக்கான பல்வேறு உதவிகளை வேளாண்துறையினர் மூலம் கல்லாபுரம் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.நடவுப்பணிகளுக்கு, வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டால், விவசாயிகள், தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெறுவார்கள். கொள்முதல் நிலையம் கல்லாபுரம் பகுதியில், அரசு கொள்முதல் நிலையம் அமைத்தால், அறுவடை சமயங்களில், விலை வீழ்ச்சியால், ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படும்.சீசன் சமயங்களில், தற்காலிக கொள்முதல் மையமாவது துவங்க வேண்டும் என்ற கோரிக்கையும், கண்டுகொள்ளப்படுவதில்லை.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments