பொள்ளாச்சி தலைமை அரசு மருதுவமனையின் அலட்சியம் - பொதுமக்கள் அவதி..!

        -MMH


   கோவை மாவட்டம் பொள்ளாச்சி தலைமை அரசு மருதுவமனையில் செயல்படாத அறுவை சிகிச்சை மையம் பொள்ளாச்சி அரசு மருத்துவ மனை கடந்த 2009 ஆம் ஆண்டு தாலுக்கா மருத்துவ மனையாக இருந்தது மக்கள் பெருக்கம் தலுக்காவின் வளர்ச்சி போன்ற இந்த நிலையில் தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி மக்களுக்கு கிடைத்து இருந்தாலும் இப்போது ஒரு சில சிகிச்சை நிறுத்தி வைக்க பட்டுள்ளதாக தெரிகிறது.



  பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டி, கோலர்ப்பட்டி, ராசக்கப்பளையம், ஆனைமலை, பெரியபோது போன்று பொள்ளாச்சியை சுற்றி உள்ள பகுதிகளில் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது ,ஆனாலும் அவர்கள் மேல்சிகிச்சை பெற, பொள்ளாச்சி தலைமை அரசு மருதுவமனையில் போய் பார்க்க சொல்கின்றனர்.



    பொள்ளாச்சி தலைமை மருத்துவ மனையில் அனைத்து மேல்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பெறவும், விபத்து ,கர்ப்பப்பை அகற்றுதல்,கள்யீரல் அறுவைசிகிச்சை, மூக்கு தொண்டை ,அறுவை சிகிச்சை, போன்ற அனைத்து உயிரை காக்கும் அறுவை சிகிச்சைகளும் இந்த தலைமை மருதுவமனையில் இருந்தும் ,அந்த சேவையை மக்களுக்கு பயன்படுத்தாமல் நிறுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இது தொடர்பாக பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவ மனை நோயாளிகள் நலசங்க உறுப்பினர்,திரு வெள்ளை நட்ராஜ் கூறுகையில்:


      கடந்த 6 மாதங்களாக பொள்ளாச்சி தலைமை மருத்துவ மனை கொரோனோ நோய் தொற்றின் காரணமாக அறுவை சிகிச்சை அரங்கு இங்கு செயல்படுவது இல்லை ,நாங்களும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம் மக்களின் அவதியை, கோரிக்கையை அவர்கள் எங்களிடமும் குறைகளை கூறுகின்றனர், ஏழை மக்கள் முழுக்க, முழுக்க அரசு மருத்துவ மனையையே நம்பி வருகின்றனர் ஆனால் இப்போ தொடர்ந்து 6 மாத காலம் அறுவை சிகிச்சை வார்டு செயல்படாமல் இருப்பது மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் மக்களிடையே காண்கிறோம் என்றார்.


   இந்த சூழ்நிலையில் பொள்ளாச்சி அரசு தலைமை மருதுவமனையில் எப்போது அறுவை சிகிச்சை அரங்குகள் திறக்கப்படும், சிகிச்சை எப்போது அளிக்கபடும்,மக்களின் வேதன்னையும், அவதியும் புரியுமா என மக்கள் நொந்து செல்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments