என்னங்க இந்த ப்ளூ டீ ..❔

     -MMH


     ப்ளூ டீ குடிச்சு இருக்கீங்களா ..?அதனுடன் நன்மைகள் என்னன்னு தெரியுமா ..???


      உலகத்தில் மதுவுக்கு பிறகு அதிக ரசிகர்கள் என்று சொன்னால் டீ மற்றும் காபி க்கு தான். இந்த கடையில் டீ நல்லா இருக்கு என்று யாராவது கூறினால் உடனே அதை சுவைத்து விட்டு தான் மற்ற வேலையைப் பார்ப்பார்கள்.முதலில் ஒரு சுவைத்து ஆரம்பித்து கடைசியில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்டிப்பாக டீ குடித்து ஆகவேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் உருவாகி விடுகின்றது.


     ஒரு சிலர் மனதில் டீ குடித்தால் மட்டும்தான் வேலை ஓடும் என்கிற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். டீ குடிப்பதனால் சுறுசுறுப்பை மெதுவாக இழந்து விடுவதோடு இல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் எடுத்துக்கொள்கிறோம் .இதனால் செயற்கை நிறைந்த டீ குடிக்காமல் சங்கு பூவின் ஆல் ஆன ப்ளூ டீ குடித்து பாருங்கள். 


     இந்த டீ மிகவும் உடல் நலத்திற்கு நல்லது சங்குப்பூ இயற்கை நமக்கு வழங்கிய ஒரு வரப்பிரசாதம். இந்த பூவை தேடி அலையாமல் எளிதில் கிடைக்கக் கூடிய தாகும் சங்குப்பூ உடலில் உள்ள குடல் புண்ணை ஆற்ற உதவுகிறது மற்றும் கர்ப்பப்பை சம்பந்தமான எல்லா தடைகளையும் தீர்த்து நம் உடம்பில் வலிமையை ஏற்படுத்துகிறது இதனால் ப்ளூ டீ பெண்கள் குடிப்பது மிகவும் நல்லது. 


     முதலில் செடிகளிலிருந்து சங்கு பூவை பறித்துக் கொள்ள வேண்டும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை கொதிக்கவிட்டு சங்குப்பூ 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும் நன்கு கொதித்த பின்னர் தேவையான அளவு எலுமிச்சை சாரை சேர்த்துக்கொள்ளவேண்டும் பின்னர் ப்ளூ நிறத்தில் மாறிவிடும் இந்த கலரை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இதனோடு தேன் சேர்த்து பருகி வந்தால் உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும். தினமும் ஒரு வேளையாவது இந்த டீயை பருக வேண்டும். அதை குடிக்க கால அவகாசம் எதுவும் கிடையாது நினைக்கும் போதெல்லாம் குடியுங்கள் மகிழுங்கள்.


-ஸ்டார் வெங்கட்.


Comments