கோவை பச்சா பாளையத்தில் வெள்ளி விழா கிரிக்கெட் போட்டி !!

     MMH


கோவை பச்சா பாளையத்தில்  
வெள்ளி விழா கிரிக்கெட் போட்டி !!!


     கோவை மாவட்ட த.மு.மு.க. 25.ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு  (மர்ஹூம். அப்துல் பஷிர் நினைவு கோப்பை) 8 அணிகள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டி தமுமுககோவை மாவட்ட தொண்டரனி சார்பாக ஞாயிறு(25,10.2020)காலை பொருளாளர் 'சுல்தான்' துவங்கி வைத்தார். 


     கோவை பச்சாபாளையம் ஆர்ச் பிச் மைதானத்தில் வெள்ளிவிழா கிரிக்கெட் போட்டி நேற்று( 25.10.2020) கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர் அணியின் சார்பாக நடைபெற்றது


     காலை முதல் நடைபெற்ற 8 அணிகள் பங்குபெற்ற  கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு  செல்வபுரம் பூம் பூம் அணி& செல்வபுரம் ஸ்பாட்டன் அணி தகுதி பெற்றனர்.     போட்டியை துவங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய மாநில துணைத் தலைவர் 'கோவை செய்யது', நாளைய வரலாறு புலனாய்வு இதழின் ஆசிரியர் 'முஹம்மது ஹாரூன்'  அவர்களும் வெளியீட்டாளர் 'முஹம்மது இஸ்மாயீல்'அவர்களும் வருகை புரிந்தனர் 


     இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற செல்வபுரம் பூம் பூம் அணியினருக்கு விண்ணர் கோப்பையும் ஸ்பாட்டன் அணிக்கு ரன்னர் கோப்பையும் கோவை செய்து வழங்கினார்கள். 


     தொடர் நாயகனாக பூம் பூம் அணியின் 'அரபாத்திற்கு' பேட் மற்றும் நினைவு கோப்பையும்,இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக பூம்பூம் அணியின் 'சகாவிற்கு' நினைவுக்கோப்பையும், கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு சீல்டும் வழங்கப்பட்டது.      இந்நிகழ்வில் கோவை மாவட்ட த.மு.மு.க. தலைவர் 
'RM ரபிக்' கோவை மாவட்ட செயலாளர் 'புரோஸ்கான்'  மாவட்ட பொருளாளர் 'சுல்தான்' துணைத் தலைவர் 'ஜலால்' துணைச் செயலாளர் 'செல்வபுரம் நசீர்' துனைச் செயலாளர் 'வளையல் இப்ராஹீம்' மாவட்ட தொண்டரணி செயலாளர் 'ஆசிக்' மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் 'ஷபீக்' செயற்குழு'உறுப்பினர் ,ஷாகித், தொன்டரணி 'உமர் பைசல்' மற்றும் 'மைதீன்' நாளையவவரலாறு புலனாய்வு இதழின் நிருபர் 'செல்வபுரம் ஹனீப்' மற்றும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் 'அன்வர்,உஸ்மான்,சிப்ஸ் ரியாஸ்,நிஜாம், எக்சஸ் யாசர், சமீர், பைசல்,ரிஜாஸ்,படையப்பா முனீர்,பரீத்மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


நாளையவரலாறு செய்திக்காக, 


-ஹனீப்,செல்வபுரம். 


Comments