சிவகங்கை அருகே மக்கள் பாதை சார்பாக நலத்திட்ட உதவிகள்!!

       -MMH


   அரளிபட்டியில் எட்டு பிள்ளைகளுடன் வறுமையில் வாடும் குடும்பத்திற்கு 'மக்கள் பாதை' நிர்வாகிகள் மளிகைப் பொருட்கள் வழங்கல்.


  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மருதிப்பட்டி அருகே அரளிபட்டியில்,எட்டு பிள்ளைகளுடன் மொத்த குடும்ப உறுப்பினர் பத்து பேருடன் ( கால் ஊனமுற்ற நிலையில் ஒருவர் உட்பட)வறுமையில் வாடும் செய்தி கேட்டு, தகவல் கிடைத்த 2 நாளில் உடனே 'மக்கள் பாதை' நிர்வாகிகள் அந்தக் குடும்பத்திற்குத் தேவையான மளிகை பொருட்களை கொடுத்து உதவினர்.  நிகழ்வில் சிங்கம்புணரி ஒருங்கிணைப்பாளர் சரவணன் திருப்புவனம் ஒன்றியத்தின் சார்பாக சக்தி கணேஷ் மற்றும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். மளிகை பொருட்கள் கொடுத்து உதவிக் கரம் நீட்டிய மக்கள் பாதை இயக்கத்திற்கு,
பயனாளிகள் நன்றியைத் தெரிவித்து கொண்டனர்.


-பாரூக் முகம்மது அலி,சிவகங்கை மாவட்டம்.


Comments