நாடு முழுதும் ஒரே எண். 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது! இண்டேன் நிறுவனம் முக்கிய அறிவிப்பு!

 


        -MMH


இந்திய எண்ணெய் நிறுவனம் இண்டேன்,   சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்காக நாடு முழுவதும் 7718955555 என்ற  எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. இது வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும்  செயல்படும். குறுஞ்செய்தி மற்றும் ஐ.வி.ஆர்.எஸ். மூலமும் இந்த வசதியைப் பெற  முடியும். வாடிக்கையாளர்கள் ஒரு மாநிலத்தை விட்டு வேறு மாநிலம் சென்றாலும்  முன்பதிவு எண் அப்படியே இருக்கும்.


தற்போது முன்பதிவு செய்வதற்கு அமலில்  இருக்கும் எண் வருகிற 31-ந் தேதி நள்ளிரவுக்கு பிறகு நிறுத்தப்படுகிறது.  அதற்கு பிறகு (நவம்பர் 1-ந் தேதி முதல்) புதிய தொலைபேசி எண்ணைத் தொடர்பு  கொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணைப்   பயன்படுத்தி மட்டுமே இதில் முன்பதிவு செய்ய முடியும்.  வாடிக்கையாளரின் எண்  ஏற்கனவே இண்டேன் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால், ஐ.வி.ஆர்.எஸ். 16  இலக்க நுகர்வோர் எண் கேட்கப்படும். வாடிக்கையாளர் தகவல்களை  உறுதிப்படுத்தியவுடன், முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படும்.


பதிவு செய்யப்பட்ட  செல்போன் மட்டும் அல்லாது கூடுதலாக மற்றொரு செல்போன் எண்ணில் இருந்து  முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அவ்வாறு முன்பதிவு  செய்யாத செல்போனில் இருந்து முன்பதிவு செய்யும் போது முதலில்  வாடிக்கையாளரின் சமையல் எரிவாயு இணைப்பின் 16 இலக்க எண் கேட்கப்படும்.  பின்னர் அந்த செல்போனில் இருந்தும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


மேற்கண்ட தகவலை இந்திய எண்ணெய் நிறுவன பொதுமேலாளர் (தகவல் தொடர்பு) ஆர்.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments