பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் அக்.,17 முதல்..!

    -MMH


பண்டிகைக்காலங்களை முன்னிட்டு மேலும் 78 சிறப்பு ரயில்கள் அக்டோபர் 17ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.தேஜாஸ் அதிவிரைவு ரயில் உள்ளிட்டவையும் ஓடத் தொடங்கும். இதுகுறித்து மண்டலங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் 39 ஜோடி சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவற்றில் ஏசி, துரந்தோ, வந்தே பாரத், ராஜதானி, சதாப்தி ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை  200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது மொத்த சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரித்துள்ளது.


-அருண்குமார்,கோவை மேற்கு.


Comments