தடாகம் சுடுகாடு அருகில் கஞ்சா விற்றவர்கள் கைது!!

     -MMH


       துடியலூர் தடாகம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட  தடாகம் சுடுகாடு அருகில் கஞ்சா விற்ற கோட்டதுறையை சேர்ந்த நபர்களை அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த ஆய்வாளர் பால முரளி சுந்தரம்,தனிப்படை காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பொன்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவராஜ், ஆறுமுகம் ஆகியோர்கள் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகப்படும் வண்ணம் சுடுகாடு அருகில் நின்று கொண்டு இருந்த கேரள பதிவு என் கொன்ட இரண்டு சக்கர வாகனத்தை கண்ட காவலர்கள் மேலும் அங்கு நின்றிருந்த நபர்களை விசாரித்த போது அவர்கள் கையில் சுமார் இரண்டு கிலோ கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் கேரளாவில் கோட்டத்துறையை சேர்ந்த பாண்டியன் (எ) கருப்புசாமி 31 மற்றும் அரவிந்த் 19 அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


-சீனி,போத்தனூர்.


Comments