இந்தியாவில் கிரிக்கெட்ற்கு முக்கியத்துவம்! - ஐகோர்ட் கருத்து..!

         -MMH


  இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாவும் அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறுவோருக்கு மத்திய மாநில அரசுகள் அளிக்கும் பரிசு தொகையோ வேலைவாய்ப்பில் முன்னுரிமையோ மாற்றுத் திறனாளிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றோருக்கு வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கபடுவதாகவும் அது மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணம் இளைஞர்களிடையே உருவாகபட்டுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தது.


 மனிதனின் ஆரோக்கியத்தை காத்திடும் பல வகையான விளையாட்டுகள் இந்தியாவில் உள்ளதாகவும் அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறி விசாரணையை வரும் 12-்ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


-ஸ்டார் வெங்கட்.


Comments