மின் அதிகாரியிடம் ரூ .2 லட்சம் பறிமுதல்!! - திருப்பூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!!

      -MMH


   திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத, 2.01 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.திருப்பூர், காங்கயம் ரோடு, ஆர்.வி.இ., நகரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், வசூல் வேட்டை நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது.


     லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், நேற்று திடீரென அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர்.


  மாலை, 4:05 மணிக்கு துவங்கிய ஆய்வு, 6:30 மணி வரை தொடர்ந்தது. அதில், கணக்கில் வராத, 2.01 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி கூறுகையில், ''புகாரின் பேரில், திடீர் ரெய்டு நடத்தப்பட்டது. அதில், உதவி செயற்பொறியாளர் கிரி வசமிருந்த, கணக்கில் வராத, இரண்டு லட்சத்து, ஆயிரத்து 396 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, விசாரித்து வருகிறோம்,'' என்றார்.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.


Comments