அனல் பறக்கும் 2G வழக்கு தொடங்கியது!! - இன்று நடந்தது என்ன!!

      -MMH 


        கடந்த 2017 ம் ஆண்டு 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்டோரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து இருந்தது.


        ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி ஸ்பெக்டரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்தது.
இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.         இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சேத்தி, வரும் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதால், அனைத்து தரப்பு வாதங்களையும் செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் சஞ்சய் ஜெயின் தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு தொடங்கியுள்ளது.


         இந்த நிலையில், சிபிஐ, அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது 2 ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை ஏற்று கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அக்டோபர் 5 ஆம் தேதி (இன்று முதல்) முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.        இந்நிலையில், இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. அப்போது, மேல் முறையீடு செய்ய சிபிஐ-க்கு மத்திய அரசு அளித்த அனுமதி கடிதத்தை அளிக்க வேண்டும் என்று எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதம் செய்தார். மேலும், சி.பி.ஐ கையேட்டை சி.பி.ஐ-யே கடைபிடிப்பதில்லை எனவும் எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதம் செய்தார்.


         சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்தது நிர்வாக ரீதியானது என்றும், நிர்வாக ரீதியான ஆவணம் என்பதால் எதிர்மனுதாரர்களுக்கு தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் சி.பி.ஐ. தரப்பு வாதம் செய்துள்ளது.


-ஸ்டார் வெங்கட்.


Comments