உலக இருதய தினம்!! - அரசு மருதகருத்தரங்கம்!!

      -MMH 


              உலக இருதய தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் காணொலிக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


            இந்தக் கருத்தரங்கை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு மாரடைப்பு தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பால் துவக்கிவைத்து, காணொலி மூலமாக இருதய நோய் தடுப்பு முறைகள் குறித்து உரையாற்றினார். இதில், கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ், இருதயத் துறை பேராசிரியர் நம்பிராஜன் மற்றும் உதவிப் பேராசிரியர்கள், மூத்த இதய மருத்துவர் புவனேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


          இது குறித்து மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறியதாவது.


          கொரோனா காலத்தில் கோவை அரசு மருத்துவமனையின் இருதய சிகிச்சை பிரிவில் 17 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், 614 மாரடைப்பு நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 214 பேருக்கு ஆன்ஜியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 49 பேருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட்டி ஸ்டென்ட் பொருத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


         தவிர, இரண்டு இருதயத் துடிப்பு குறைபாடு உள்ள நபர்களுக்கு பேஸ் மேக்கர் கருவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 6 நோயாளிகளுக்கு தற்காலிக பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. மேலும், 2 ஆயிரத்து 956 பேருக்கு எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments