கோவை மாவட்ட ஆட்சியர்! - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

      -MMH


பொள்ளாச்சி ஆனைமலை சுற்று  வட்டார பகுதி விவசாயிகளுக்கு 
முக்கிய  அறிவிப்பு:
கோவைமாவட்டஆட்சியரின்உத்தரவின்படி, நாளை13.10.2020செவ்வாய்க்கிழமைசிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் மற்றும் மழைத்தூவுவான் அமைக்க வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்படுள்ளது.இதில் சிறு குறு விவசாயிகளுக்கு எளிதில் சிறு குறு விவசாய சான்றிதழ் மற்றும் திட்டம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களும் பெற வருவாய் துறையினர் மற்றும் வேளாண்மை துறையினரும்  இணைந்து அந்த அந்த நில வருவாய் ஆய்வாளர் RI Office அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அனைத்து விவசாயிகளும் திட்டம் தொடர்பான அனைத்து சான்றிதழ் சிறு குறு விவசாய சான்றிதழ், அடங்கல், உரிமை சான்று, FMB, டோபோ வரைபடம் பெற்று பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.


நாளைய வரலாறு செய்திக்காக


-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments