குப்பைகளை அப்புறத்த வேண்டும்!! - இல்லையெனில் முற்றுகை இடுவோம்!!

     -MMH


            பொள்ளாச்சிஆனைமலையை அடுத்த திவான்சாம்புதூர்ஊர்
பொதுமக்கள் வீட்டு கழிவுகளை அப்புறப்படுத்த பல்வேறு இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக குப்பை தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.அந்த குப்பைத் தொட்டிகள் நிறைந்தும் அதை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டது நிர்வாகம்.             இதனால் பொதுமக்கள் தொட்டியின் அருகில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மக்கள் புலம்புகிறார்கள்.மேலும் ஊரில் பல பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளின் நிலை இதே நிலை தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.


             ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என 'பிரண்ட்ஸ் ஆப் திவான்சாம்புதூர்' நண்பர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.மேலும் இதே நிலை தொடர்ந்தால் நண்பர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


நாளைய வரலாறு செய்திக்காக,


- M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments