மக்களிடையே வாழ்த்துகளை பெறும் பொள்ளாச்சி போலீஸ்..!!

     -MMH


மக்களிடையே வாழ்த்துகளை பெறும் பொள்ளாச்சி போலீஸ்..!!


1.நாம் வாகனத்தில் செல்லும் போது நம் உயிரை காக்க நமக்கு ஹெல்மெட் அவசியம்.


     காரணம் நம் உடலில் உள்ள உறுப்புகளில் அனைத்தும்,நமக்கு விபத்துகள் ஏற்படும் போது மருதுவமனையில் சிகிச்சை பெறலாம்,இது ஒரு பக்கம் இருக்க.விபத்துக்களில் கை,கால், இடுப்பு எலும்பு போன்றவை நாம் சிகிச்சையில் சரி செய்து விடலாம்.


       விபத்துகளால் கழுத்துக்கு மேல் ஏற் ப்படும் பாதிப்புகள் அனைத்தும் ஒரு சில நேரங்களில் மருத்துவ சிகிச்சையில் நாம் சரி செய்ய முடியாது,காரணம் நாம் தலை பகுதில் உள்ள ஒவ்வொரு பகுதி நரம்பு மண்டலங்களை மிகவும் சிறிதாகவும்,நுண்ணிய அளவிலும் இருக்கிறது.அது பிளவு பட்டால் சிகிச்சைகள் பெற்றும்,ஒரு சில காரணங்களால் உயிரை இழக்க நேரிடுகிறது.


2.நாம் வாகனத்தில் செல்லும் போது நமது செல்போனில் பேச்சுகளுடன் பேசிக்கொண்டே,பயணத்தை தொடர்கிறோம்.கவனம் சிதறாமல் இருந்தாலும்,நாம் பேசும் வார்த்தைகளில் சுவாரசியம் மாற மாற நமது கவனம் செல்போன் பேச்சில் மட்டுமே இருக்கும்.வாகன ஓட்டிகளின் பயணத்தில் நிதானம் இல்லாமல் வாகன விபத்து போன்றவை நிறைய நடக்குகிறது.


     இதனை தவிர்க்க தமிழக அரசு,தமிழக காவல் துறை ,பொது துறை,தன்னார்வலர்கள் அனைவரும் நம் மக்களின் நலன் கருதி, சாலையில்,தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் அறிவிப்புகளை மக்களுக்கு அறிவிக்கின்றன.



     ஆனால் அத்தனை விஷயங்களை கேட்டு நடக்க நாங்கள் என்ன சும்மாவா இருக்கோம்,நாங்க ரொம்ப பிஸி என்று மக்களுள்,மக்களான ஒரு நபர், பொள்ளாச்சி மேற்கு பாலக்காடு சாலையில் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அய்யம் பாளையம் சாலையில் அவரது வாகனத்தில் செல்போம் பேசியபடி,ஹெல்மெட்ட் அணியாமல் ஒரு கை விட்டு பயணம் செய்து வந்துள்ளார்.


      இதனை கண்டு அவ்வழியே வந்த காவல் அதிகாரி,செல்போனை பறித்து,பைன் போடாமல் அறிவுரை கூறியதுடன்,அந்த நபரின் செல்போன் பேச்சாளரிடம் ,நீங்கள் பேசும் நபர் வாகனத்தை ஓட்டி கொண்டு ஹெல்மெட் அணியாமல் பேசி கொண்டு இருக்கிறார். இது உங்களுக்கு தெரியாது.அவருக்கு உயிர் போனால் யார் தருவார்கள் என்று டோஸ் கொடுத்து, செல்போன் பேசிய பிஸி  நபரை கடுமையாக எச்சரித்து உள்ளார் பொள்ளாச்சி காவல் துறை அதிகாரி ஒருவர்.


     இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த போலீஸ் அதிகாரியை மனதினுள் பாராட்டி வருகின்றனர்.


  அரசு கூறும் விதி முறைகள் அனைத்தையும் கடைபிடித்தால் விபத்தோ,கோரோனாவோ ஒன்றும் நமக்கு வராது என்பதில் ஐயமில்லை.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


 -V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments