பொள்ளாச்சி அருகே பொது கழிப்பிடம் கட்டி 4 வருடங்கள் ஆகியும் திறக்கப்பட வில்லை..!

    -MMH


பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலமநல்லூர் கிராமத்தில் புது காலனி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒன்றிய பொது நிதியிலிருந்து 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில்  பொது கழிப்பிடம் கட்டப்பட்டது இக்கட்டிடம் 4 ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழித்து வருகின்றனர்  இதனால் இப்பகுதியில்  சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது இதை கருத்தில் கொண்டு கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி உள்ள பொதுமக்கள்.


நாளை வரலாறு செய்திக்காக


-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.


Comments