கோவை மனித உரிமைகள் தொழிலாளர் நலச் சங்கம் ஆட்சியரிடம் மனு!!

      -MMH


 கோவை:போதிய மருத்துவ வசதி இன்றி தவித்துக்கொண்டிருக்கும் அன்பு நகர் குடியிருப்பு வாசிகளுக்கு அனைத்து இந்திய மனித  உரிமைகள் தொழிலாளர் நல சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 


          அனைத்து இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் 
நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் யுவராஜா பாலன் மற்றும் பொதுச்செயலாளர் சிவசங்கரன்கணபதி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


           அதில்  கோவை மலுமிச்சம்பட்டி அன்பு நகர் குடியிருப்பில் குடியிருந்து வரும் மக்களுக்கு போதிய மருத்துவ வசதியின்றி உள்ளதாகவும் இதுவரை இங்கு சரியான நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் 13 பேர் உயிரிழந்தாகவும் மேலும் சென்றவாரம் ஒரு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வராததாலும் இங்குள்ள எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்க வில்லை.


           அதனால் கிணத்துக்கடவிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் இந்த பகுதியில் சரியான மருத்துவமனை சுகாதார நிலையம் இல்லை, தண்ணீர் பிரச்சினையும் உள்ளது எனவும் அப்பகுதி மக்களுக்கு உதவுமாறு மாவட்ட ஆட்சியாரிடம் மனு அளித்தனர். இதில் அனைத்து இந்திய மனித உரிமைகள் தொழிலாளர் நலச் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


-சீனி,போத்தனூர்.


Comments