சீர்மிகு பொள்ளாச்சி சீரழிந்து வரும் கதை!!

     -MMH


பொள்ளாச்சி ஓர கவிதை 


கதைக்கேலாயோ ...
கதைககேலாயோ...


சீர்மிகு பொள்ளாச்சி நகரம் சீரழிந்து வரும் கதை கேலாயோ...!


பொருள் ஆட்சி செய்யும் பொள்ளாச்சி நகரம் மது கோப்பைக்குள் பொலிவிழந்து கிடக்குதடி...!


புருஷன் வருவான் புன்னகை சிந்துவான்
அப்பா வருவார் என்னை தூக்கி கொஞ்சுவாறு
பையன் வருவான் பசியை போகிடுவானு காத்து கிடந்த எங்க பொம்பளைங்க கன்னுலயேல்லாம் கண்ணீர் ஆற பேருகுதடி...!


மது கோப்பையில் மிதந்தது வரும் உறவுகளால் எங்க தன்மானம் காத்துல பறகுத்தடி...!


நெடு நெடுன்னு வழந்தவனும் உழைக்கிறான்
முறுக்கு மீசை வச்சவனும் உழைக்குரான்
உளைச்ச காலு வீடு வந்து சேரும் முன்னே 
அது அந்த மதுக்கடையை அது தேடி அலையுதனற்றோ...!


அந்த பொள்ளாச்சி பயணிகள் நிழல் குடை எல்லாம் 
இங்கே மது அருந்தும் இடமாய் ஆனதன்றோ...!


இந்த குடி மகன்கள் உள்ளே, நம்ம பயணிகள் வெளியேனு மாறி போனதன்றோ...!


யாரு கேற்பா இந்த அநியாயத்தை ...!  


ரோட்டில் செல்லும் நம் தாய் மார்களின் கண்ணியத்தை காக்க வேண்டாமா ..
இந்த பொள்ளாச்சி சாதனை நாயகர்கள் ஆன நம் இளைஞர்களை பதுகாக்க வேண்டாமா ...
பிஞ்சு மனசுல நஞ்ச விதைக்குற இந்த களைகளை களைவது யார்??


பொதிகை மனம் வீசும் இந்த பொள்ளாச்சி நகரம் எங்கும் மதுபானம் மனம் வீசி மயங்குதன்றோ....!!


பயணிகள் நிழல் குடையில் மது விருந்தும் பலகாலமாக
நடக்குதன்றோ...!!


தட்டு தடுமாறி வரும் அந்த குடி மகன்களை தட்டி கேட்பது யார்...!!??


சட்டையை பிடித்து உழுக்க அந்த சமூக ஆர்வளர்கள் எங்கே...!!??


அவர்தம் கன்னத்தை சிவக்க வைக்க அந்த காவல் துறையினர் எங்கே...!!??


லத்தியல் பூஜை செய்ய அந்த ரோந்து போலீசார் எங்கே...!!??


நாளைய வரலாறு செய்திகளுக்கு


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments