கோவை அருகே குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை மீட்பு..!

        -MMH


சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்பு குப்பைத்தொட்டி அருகே பிறந்து ஐந்தே நாட்கள் ஆன பெண் குழந்தை மீட்பு, கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய ஏட்டாக பணிபுரிந்து வருபவர்கள் இளையராஜா மற்றும் செந்தில்குமார் இவர்கள் குரானா விழிப்புணர்வு பிரச்சார வேன் வாகனத்தில்  இருந்து வருகிறார்கள் சற்றுமுன் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வாகனத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது.


பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குப்பை தொட்டி அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டு உடனே ஓடிச்சென்று பார்த்தபோது பிறந்து 5 நாட்கள் ஆன பெண் குழந்தை ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர், உடனே அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு அருகிலிருந்த அம்மா உணவகத்தில் உள்ள பெண்களை  அழைத்து காண்பித்தனர்.


அந்த குழந்தையை எடுத்து முதலுதவி செய்துவிட்டு 108 வாகனத்திற்கு தகவல் கொடுத்தனர்,மேலும் இச்சம்பவத்தை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள சிங்கநல்லூர் போலீசாரை பாராட்டினார்கள், மேலும் அந்த குழந்தையின் தாயாரை பற்றி அந்த பகுதி முழுவதும் விசாரித்து வருகின்றனர்.


-சீனி,போத்தனூர்.


Comments