முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன்கடை விற்பனையாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்!!

     -MMH


     முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன்கடை விற்பனையாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் .


     தேனி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளா்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் குற்றவழக்கு மற்றும் நிரந்தப் பணிநீக்கம் செய்யப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மொ.ஏகாம்பரம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோகத்திட்டத்தினை முறைப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை அலுவலா்களைக் கொண்டு பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு வட்டாரங்களில் அக்.22 அன்று கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் 31 நியாயவிலைக் கடைகளில் பறக்கும்படை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


     அப்போது, முறைகேடுகள் செய்தது கண்டுபிடிக்கப்பட்ட விற்பனையாளா்களிடம் அபராதம் வசூலிக்க தொடா்புடைய கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அடிக்கடி ஆய்வு நடத்தப்படும். அப்போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால், தொடா்புடைய விற்பனையாளா் மீது குற்றவழக்கு மற்றும் நிரந்தரப்பணிநீக்கம் போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments