பள்ளிகள் திறப்பு!! - அமைச்சர் திடீர் ஆலோசனை!!

   -MMH


         பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். 
 
          பள்ளிகளை எப்போது திறப்பது, பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்கலாமா என்பது உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்க பள்ளிகளுக்கு பெற்றோர் அனுமதி பெற்று வரலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.


          சில தினங்களில் இந்த அறிவிப்பை தமிழக அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், அடுத்த மாதம் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை துவக்குவது குறித்தும், அதேபோன்று பாடத்திட்டம் நடத்தி முடிக்கப்படாத சூழலில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து, துறை செயலாளர் மற்றும் இயக்குனர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். 
 
             மேலும் உயர் அதிகாரிகளுடன் நடைபெறும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார் . இதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நாளை சென்னைக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
              தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அடுத்த மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குவது குறித்தும், பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார்.


-நம்ம ஒற்றன்.


Comments