"பாலியல் தொல்லை" இனி மரண தண்டனை தான்!! - எச்சரித்த காவல்துறை!!

        -MMH


            18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் மரண தண்டனை நிச்சயம் துணைசூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


             கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்த திருக்கோவிலூர் பஸ் நிலையத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தின் முன்பு நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில், 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் வழங்கியிருக்கும் மரண தண்டனை பற்றிய எச்சரிக்கையை பொதுமக்களில் குற்றம் சிந்தனை உடையவர்களுக்கு தெரிவிக்கும் பிரச்சார நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.


             நிகழ்ச்சியில் பங்கேற்ற திருக்கோவிலூர் துணை சூப்பிரண்டு ராஜீ தலைமை தாங்கி கூறியிருப்பதாவது,18 வயதிற்குட்பட்ட பெண் அல்லது ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை , 20 வருட சிறை தண்டனை அல்லது 10 வருட சிறை தண்டனை என்ற தீர்ப்பு இருந்த நிலையில் இப்பொழுது அந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
 இதில் குற்ற சிந்தனை உடையவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும் திருத்தவிடில் மரண தண்டனை நிச்சியம் கிடைக்கும் என்பது உறுதி ஆகும்.


              இதைத்தொடர்ந்து பாலியல் ரீதியான புகார்களை குறித்து ரத்த சம்பந்தமானவர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற நிலை மாறி இப்போது யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், சம்பவம் உண்மையானதாக இருக்க வேண்டும். இந்தப் புகார்கள் தொடர்பாக 1098 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ புகார்களை அளிக்கலாம் என பிரச்சாரத்தில் கூறினர்.இந்நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், சுந்தரராஜன் மற்றும் காவல்துறையினர்கள் ,பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


-மைதீன்.


Comments