நகராட்சி மீது அவதூறு! டி.எஸ்.பி யிடம் புகார்!!

     -MMH


     பொய்யான தகவலை வெளியிட்டு அவதுாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்லடம் நகராட்சி ஊழியர்கள் டி.எஸ்.பி யிடம் புகார் மனு அளித்தனர்.பல்லடம் நகராட்சி, சேடபாளையம் குமரன் காலனியை சேர்ந்த வேலுசாமி என்பவர், இரண்டு குடிநீர் இணைப்பு பெற்றுள்ளார். 15 ஆயிரம் லி., கொள்ளளவுடைய நிலமட்ட தொட்டி கட்டி, சட்ட விரோதமாகஅதில் குடிநீரை தேக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறி, நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், ஊழியர்கள்குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.நகராட்சியின் இந்த நடவடிக்கையால், வேலுசாமி கலெக்டரிடம் புகார் அளித்தார். 'லஞ்சம் கேட்டு நகராட்சி ஊழியர்கள் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், அவர்கள் கேட்ட பணத்தை தராததால், குடிநீர் இணைப்பை துண்டித்ததாகவும்', அவர் கூறினார்.இது தொடர்பாக, நகராட்சி ஊழியர்கள் நேற்று பல்லடம் டி.எஸ்.பி., ஸ்ரீராமச்சந்திரனிடம் அளித்த புகார் மனுவில், 'நகராட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்ட வேலுசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மதுஹனீப், திருப்பூர்.


Comments