திருத்தனி பேருந்து நிலையத்தில் சுகாதார சீர் கேடு!!
-MMH
திருத்தணி பேருந்து நிலையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். திருத்தணி பகுதியில் இருந்து சென்னை, திருப்பதி, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்துகளை பிடித்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கின்றனர்.
இந்நிலையில், திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஏற்படும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக திருத்தணி நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. தற்போது, அதனை மாநகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காமல் விட்டதால் கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பேருந்து நிலையத்தில் தேங்கி கிடக்கிறது.
மேலும், அவ்வழியே செல்லும் பேருந்துகள் இவற்றின் மீது ஏறி செல்வதால் பயணிகளின் மீது இந்த கழிவுநீர் படுகிறது. இதனால் பேருந்து பயணிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும், இவற்றால் அவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பேருந்து நிலையத்தில் கழிவறையில் இருந்து வௌியேறும் கழிவுநீரை தடுக்க உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-பீர் முஹம்மது,குறிச்சி.
Comments