தமிழக அரசின் தலைமை செய்லாளரின் பதவிக்காலம் நீடிப்பு!!

     -MMH


     தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு!


     சென்னை: தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு அளிக்கப்பட்ட பணி நீட்டிப்பு இம்மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


     கிரிஜா வைத்தியநாதனின் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி தலைமைச் செயலராகப் பணியில் சேர்ந்தார்.


     சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கே சண்முகம் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் முதுநிலை வேளாண்மை பட்டப்படிப்பு முடித்து, ஐஏஎஸ் தேர்வில் வென்று, 1985ம் ஆண்டு தமிழ அரசின் ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.


     இவர் தலைமைச் செயலாளராக பதவி ஏற்கும் முன்னர் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்துள்ளார்.
நிதித் துறை செயலாளராக நீண்ட அனுபவசாலியான கே சண்முகம், எடப்பாடி முதல்வரான பின்னர், தலைமைச் செயலாளராக பதவி ஏற்றார். இவருடைய பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் அவருடைய பதவி காலத்தை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


-B.செந்தில் முருகன்,சென்னை தெற்கு.


Comments