வாட்ஸ்அ ப் மெசேஜ் மேலே வரும் "END TO END ENCRYPTED" என்பதற்கு அர்த்தம்!! - அந்தர்பல்டி அடித்தாலும் அந்தரங்கம் கசிய சான்ஸ் இல்லை!!

      -MMH


                   புதிதாக ஒரு எண்ணை பதிவு செய்து, வாட்ஸ் ஆப்பில் தெரிந்தவர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினேன். உடனே மெசேஜ் அனுப்பியதற்கு மேலே, End-to-end-encrypted செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அப்போதைக்கு வாட்ஸ்ஆப் புதுசு என்பதால், அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. பிறகு ஆன்லைன் பிசினஸ் செய்ய சைபர் செக்கியூரிட்டி கிளாஸ் போகும் போது தான், இதைப்பற்றிய விவரங்கள் தெரிந்தது. எல்லா மொபைல் செயலியிலும் இந்த வசதி இருக்காது. நன்கு மேம்படுத்தப்பட்ட செயலிகளில் மட்டுமே இந்த encrypt நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.


                      encrypt தொழில்நுட்பம் உள்ள செயலியாக இருந்தால், தாரளமாக நம்பி மெசேஜ் அனுப்ப முடியும். உதாரணத்துக்கு, "மச்சி எப்படி இருக்க?" என்று ஒரு மெசேஜ் அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அது, "HHHHHGFFFFFHHJJ" என்பது போல கணிப்பொறி மொழியாக மாறி, நண்பரை நோக்கி செல்லும், அவருக்கு காட்டும் போது, "மச்சி எப்படி இருக்க?" என்று நீங்கள் அனுப்பிய மெசேஜ் அப்படியே காட்டப்படும். இடையில் யாரும் ஆன்லைனில் புகுந்து நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை ஹாக் செய்ய முடியாது. அப்படி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை யாராவது, இடையில் புகுந்து பார்க்க வேண்டும் என்றால், பல நூறு வருடங்கள் ஆகும், வாட்ஸ்ஆப் பாதுகாப்பு கட்டமைப்பை உடைக்க. ஒரு சில மொபைல் ஆப்களுக்கு மட்டுமே பாதுகாப்பு இருக்கும்.


                  ஆனால் நீங்கள் அனுப்பும் மெசேஜ் எளிதில் decoding செய்யப்பட்டு வேறு ஒருவர் பார்க்க முடியும். பலருடைய அந்தரங்க படங்கள் கசிவது கூட இந்த முறையினால் தான். ஆனால் இந்த end to end encryption TOTO குறிப்பிட்டிருக்கும் இருக்கும் மொபைல் ஆப்களில் இடையில் புகுந்து, அவ்வளவு எளிதில் நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை decoding செய்ய இயலாது. வாட்ஸ்ஆ ப் செயலியை பொறுத்த வரைக்கும், 128 bit Encryption என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.


                  இதுவே வங்கி சார்ந்த செயலிகள் என்றால், 256 bit Encryption செய்யப்பட்டிருக்கும். ஒரு பிட்டை உடைத்து உள்ளே நுழையவே 24 ஆண்டுகள் ஆகுமாம். அப்படி என்றால் 256 bit Encryption தாண்டி தகவலை திருட வேண்டும் என்று நினைத்தால், எவ்வளவு வருடம் ஆகலாம் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள். அதுவும் உறுதியாக சொல்ல முடியாது. தற்போது நடக்கும் ஹாக்கிங்குள் கூட, தகவல் சென்று சேரும் இடத்தில் தான் திருடப்படுகிறதே தவிர, இடையில் யாரும் புகுந்து வாலாட்ட முடியாது. நினைத்துப்பாருங்கள், வாட்ஸ்ஆப் மெசேஜ் எவ்வளவு பாதுகாப்பாக இன்னொருவரை சென்று சேர்கிறது.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments