கீழே விழுந்த பணம்! - எடுத்துச் சென்றது யார்! போலீஸார் விசாரணை..!

     -MMH


   கீழே விழுந்த பணம்.எடுத்துச் சென்றது யார்? கோவையில் சிசிடிவி சிக்கல்! - கோயம்புத்தூர் மாவட்டம் மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் அப்பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் தன் கடைக்கு தேவையான சாமான்களை வாங்குவதற்காக புளியகுளம் அருகே உள்ள கடை ஒன்றிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டபோது தன்னிடமிருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கீழே தவற விட்டு வந்துவிடுகிறார். அதன்பின் பணத்தை தவற விட்ட ஜோசப் சுதாரித்துக் கொண்டு, மீண்டும் விநாயகர் கோயில் பின்புறம் உள்ள கடைக்கு (தான் பொருள் வாங்கச் சென்ற கடை) செல்கிறார்.


   அங்கு உள்ள சிசிடிவி காட்சியை பார்த்த பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணத்தை எடுத்துச் செல்வது தெரிந்தது. இந்நிலையில், பணத்தை மர்ம நபர் எடுத்துச் செல்லும் காட்சியை எடுத்துக் கொண்டு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக புளிய குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 முன்னதாக சிசிடிவி காட்சிகள் கையிலிருந்தும் ஆட்களைப் பிடிக்க முடியாமல் போலிசார் திணறும் நிலையில்,கடைகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


-கிரி,கோவை மாவட்டம். 


Comments