கொய்யாப்பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்!!

     -MMH


1. உடல் எடை குறையும்


கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில் கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது.


2. ரத்த சோகையை போக்கும்


கொய்யா பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொள்ளும்போது ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் காக்கும். மேலும் உடலில் ரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்.


3. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்


கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை உண்டு வரும்போது ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.


4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


5. புற்று நோய் வராமல் காக்கும்


கொய்யா பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது. தினமும் ஒரு கொய்யா பழத்தினை உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என பல்வேறு ஆய்வுகள் சான்று பகிர்கின்றன.


6. ரத்த அழுத்தத்தை குறைக்கும்


கொய்யா பழத்தில் சிறந்த அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் ரத்த அழுத்தமானது கட்டுக்குள் வரும்.


-ஸ்டார் வெங்கட்.


Comments