தமிழ்நாட்டில் தடையின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதிய முறை!!

     -MMH


     தமிழ்நாட்டில் தடையின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதிய முறை!!


     தமிழ்நாட்டில் கடந்த ஒன்றாம் தேதி முதல், பயோமெட்ரிக் அடிப்படையில், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், பல இடங்களில், பயோமெட்ரிக் சரியாக இயங்காத காரணத்தால், ரேசன் பொருட்களை பெறுவதில் தேக்கம் ஏற்பட்டது கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது இதன் காரணமாக தமிழ்நாட்டில், குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், அத்தியாவசிய பொருட்களை, தடையின்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் இன்று   முதல், திருத்திய வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


-அருண்குமார், கோவை மேற்கு.


Comments