ஊரையே சோகத்தில் ஆழ்த்திய ஆலமரத்தின் மரணம்!! - அஞ்சலி செலுத்திய மக்கள்!!

   -MMH


               ஒரு மரத்தின் மரணம், ஊர் மக்களை இந்தளவுக்குத் துயரத்தில் ஆழ்த்துமா? ஆல மரத்துக்கும் ஊர் மக்களுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு பந்தம் இழையோடிக்கொண்டே இருக்கும். ஆனால், அம்மரம் உயிரோடு இருக்கும்போது அதை யாரும் வாத்தைகளாக வெளிப்படுத்துவதில்லை.


               மனிதனைப் போலவே அது மரணித்த பிறகுதான் அதன் மகத்துவங்களைச் சொல்லி மக்கள் புலம்பித் தீர்ப்பார்கள். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்த ஆலமரம், பலத்த காற்றில் கீழே சாய்ந்தது. இதனால் ஊரே சோகத்தில் மூழ்கியது. பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்த இம்மரத்தின் வயது குறித்து துல்லியமான தகவல் இல்லை.


               இதை ஆயிரங்காலத்து மரம் எனப் பெயர் சூட்டிஅன்போடு அடையாளப்படுத்தி வந்திருக்கிறார்கள்.இப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கவிதை வரிகளாகப் பதிவு செய்துள்ளார், மன்னார்குடியைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கபாபு. மனசொடிந்து இவர் எழுதிய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் நம் நெஞ்சை கனமாக்குகிறது.


-ஈஷா,கோவை.


 


Comments