பல்லடத்தில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்.!

       -MMH


பல்லடத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் சாா்பில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி தினசரி ஊதியமாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.510, ஓட்டுநா்களுக்கு ரூ.590, கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்களுக்கு ரூ.400 வழங்க வேண்டும். நவம்பா் 5ஆம் தேதிக்குள் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட இபிஎஃப் தொகைகள் செலுத்தப்பட்டதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும். மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினா்.


இதில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் ரங்கராஜன், மாவட்ட துணைத் தலைவா் ப.கு.சத்தியமூா்த்தி, நிா்வாகிகள் பரமசிவம், காந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.


நாளைய வரலாறு செய்திக்காக 


-முஹம்மதுஹனீப் திருப்பூர்.


Comments