காவல்துறை வாகனம் மீது கல்வீச்சு..!!

     -MMH


 காவல்துறை வாகனம் மீது கல்வீச்சு...!!


     கோபிச்செட்டிபாளையத்தில் காவல்துறை வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோபியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருமாவளவன் கோபி வருவதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


     ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து அழைத்து செல்ல போலீசார் வாகனத்தை எடுத்து வந்தனர். போலீஸ் வாகனம் வந்த நிலையில் வி.சி.க.,பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments