இரு சக்கர வாகனம் திருடிய இருவர் கைது!!

      -MMH


     ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களை திருடி வந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.


       தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகளவில் நடைபெற்று வந்தது. குறிப்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவதாக புகாா் எழுந்தது. இந்நிலையில் வருசநாடு அருகே சிங்கராஜபுரத்தைச் சோ்ந்த நல்லமலை என்பவா் கடந்த அக்.1 ஆம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைக் காண இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.


          அவா் மீண்டும் திரும்பி வந்து பாா்த்த போது மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் க.விலக்கு காவல் நிலையத்தில புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.


          இதைத்தொடா்ந்து மாவட்ட காவல் கண்காண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்ககிருஷ்ணன், குற்றப்பிரிவு சிறப்பு சாா்பு-ஆய்வாளா் துரைராஜ், தலைமைக் காவலா்கள் ராஜ்குமாா், சக்திவேல் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைத்து இருசக்கர வாகனத் திருடா்களைத் தேடி வந்தனா்.


         இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் மதுரை பி.பி.குளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜபாண்டி மற்றும் கம்பத்தைச் சோ்ந்த மொக்கப்பாண்டி மகன் அஜித்குமாா் என்பதும், இவா்கள் இருவரும் தேனி மாவடடத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவர்களிடமிருந்து 6இரு சக்கர வாகன்களை போஸீஸார்பறி முதல் செய்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து க.விலக்கு போஸீஸார் இரு வரையும் கைது சிறையிலடைத்தனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments