சேலம் அருகே வெளிமாநில தம்பதி வெட்டி படுகொலை!! - மக்கள் அதிர்ச்சி!!

   -MMH


            சேலம் மாவட்டம், ஏற்காடு, செம்ம நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கறாரா எஸ்டேட்டில் வெளி மாநிலத்தை சேர்ந்த கோண்டபவன் தனது மனைவியுடன் கூலி வேலை செய்து வந்துள்ளார். இதற்காக இங்கு உள்ள குடியிருப்பில் இந்த தம்பதி தங்கியுள்ளது.


            இதற்கிடையில் ஹைரா பொத்ரே என்ற இவர்களது உறவினர் ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதற்கிடையே கோண்டபவன் வீட்டிலிருந்து அதிக சத்தத்துடன் ஹிந்தி பாடல்கள் ஒலித்தன. இதனால் எரிச்சலடைந்த பக்கத்து வீட்டுக்காரர், இதுகுறித்து எஸ்டேட் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக கோண்டபவன் வீட்டிற்கு மேலாளர் விரைந்துள்ளார்.


           பலமுறை தட்டியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு கோண்டபவன் தலையில் வெட்டியும், அவரது மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த தம்பதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாயை கொண்டு கொலை குறித்த தேடுதல் நடத்தப்பட்டது.


           இந்தக் கொலைகளை ஹைரா பொத்ரே தான் செய்திருக்கக் கூடும் என சந்தேகிக்கும் பொலிஸார் சோதனை சாவடி போலீசாரை உஷார் படுத்தி அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


-சோலை, சேலம்.


Comments