சோளம் விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சி!! - மழையால் பயிர் செழிப்பு!!

     -MMH


சோளம் விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சி: மழையால் பயிர் செழிப்பு..!!!-        பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், சில நாட்களாக பெய்த மழையால், சோளம் விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவையில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையால், நீர் நிலைகள் நிரம்புவது வழக்கம். இந்தாண்டு கோவை மாவட்டம் வடக்கு பகுதியில் வடகிழக்கு பருவமழை, நன்கு பெய்யும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் உழுது சோளம் பயிரிட்டனர்.


         விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இன்னும் வடகிழக்கு பருவமழை துவங்காத நிலையில், வெப்பசலனம் காரணமாக, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.


         இதனால் சோளம் விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இன்னும் முழுமையாக பெய்ய துவங்கவில்லை. கடந்தசில நாட்களாக வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்தாண்டு மழை நன்கு பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் பலர் நாட்டு மஞ்சள் சோளத்தை பயிரிட்டுள்ளனர்.


          இதன் வயது, 160 நாட்கள்.''இதில் கதிர்கள் நன்றாக பிடிப்பதால், இப்பயிரிலிருந்து அதிகளவு சோளம் கிடைக்கும், அதே நேரத்தில் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம், சோளத்தட்டு ஆகியன போதுமான அளவு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.இனி, கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் என காத்திருக்க தேவையில்லை. பசுந்தீவனங்களும் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்' என்றனர்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments