கா.க.புதூரில் உயர்மட்ட பாலம் எதிர்பார்ப்பு..!!!! நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை!!

     -MMH


       பொள்ளாச்சி அடுத்த காளியப்பகவுண்டன்புதுாரில், உயர் மட்ட பாலம் கட்ட, அரசு நிதி ஒதுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த காளியப்பகவுண்டன்புதுார், ஆத்துப்பொள்ளாச்சியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கா.க.புதுாரில் இருந்து பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டுக்கு வந்து, பொள்ளாச்சி, ஆனைமலை, மீனாட்சிபுரம் பகுதிகளுக்கு விளைபொருட்களை கொண்டு செல்கின்றனர்.


        பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டிலிருந்து, கா.க.புதுார் செல்லும் வழியில் தரைமட்ட பாலம் உள்ளது. இவ்வழியாக ஆழியாறு ஆற்றுநீர் கேரளா செல்கிறது. ஆண்டுதோறும் மழைக்காலத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைமட்ட பாலம் மூழ்கி போக்குவரத்து


        துண்டிக்கப்படுகிறது.அப்போது, கா.க. புதுாரில் இருந்து, நான்கு கி.மீ., பயணித்து, ஆத்துப்பொள்ளாச்சி சென்று, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு மக்கள் செல்கின்றனர். அங்கு உயர் மட்ட பாலம் கட்ட, நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பியும், நிதி ஒதுக்கப்படாமல் உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.


         ஆனைமலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில் இருந்து, கா.க.புதுார் வழியாக, ஆத்துப்பொள்ளாச்சி ரோடு கடந்தாண்டு மார்ச் மாதம், 91.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. அப்போதே, 200 மீ., தொலைவுக்கு உயர் மட்ட பாலம் கட்ட திட்டமிட்டு, நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. நிதி கிடைத்ததும் விரைவில் பாலம் கட்டப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments