கோவையில் லாரி மோதி மூதாட்டி பலி!!

       -MMH


லாரி ஏறி மூதாட்டி பலி
சோமனுாரில் பேரன் கண் முன் பாட்டி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி வள்ளியம்மாள், 68. இவர் தனது மகளை பார்க்க, பேரன் விஜய் ஆனந்துடன் சோமனூர் அடுத்த ஊஞ்சப்பாளையம் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தார்.


கருமத்தம்பட்டி- சோமனூர் ரோட்டில், கிருஷ்ணாபுரம் தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது, முன் சென்ற லாரியை, இடது புறமாக முந்தி செல்ல விஜய் ஆனந்த் முயன்றுள்ளார்.அப்போது, பைக் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். ரோட்டில் விழுந்த வள்ளியம்மாள் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பேரன் கண்முன் பாட்டி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது. கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


-அருண்குமார் கோவை மேற்கு.


Comments