கொரோனா வைரஸ் உடலில் இவ்வளவு நேரம் இருக்குமா..!

      -MMH


  மனிதர்களின் உடலில் சுமார் 9 மணி நேரம் கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும் என ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


  கொடிய கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தற்போது முதலிடத்தில் உள்ளது. அங்கு இந்த வைரஸ் பலரது உயிரை பலி வாங்கியதால் அமெரிக்க நாடே மிரண்டுபோய் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.


   கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.


   இந்நிலையில், "கொரோனா வைரஸ் மனித உடலில் எத்தனை மணி நேரம் தங்கும்" என ஜப்பானிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கொரோனா வைரஸ் மனித உடலில் சுமார் 9 மணிநேரம் வரை உயிரோடு இருக்கும் என தெரிய வந்துள்ளது. அதேபோல, மற்றொரு வைரஸான இன்ப்ளூயன்சா வைரஸ் மனிதர்களின் தோலில் 1 புள்ளி 8 மணி நேரம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.


   மேலும், சனிடைசர்களில் உள்ள எத்தனால், கொரோனா வைரஸ் மீது பட்டவுடன் 15 வினாடிகளில் கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என்றும் அந்த ஆய்வில்  குறிப்பிப்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி வந்தாலே கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என விஞ்ஞானிகள்  தெரிவிக்கின்றனர்.


   ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி முடிவு, கொரோனா வைரஸ் தாக்கத்தில் சிக்கி தவிக்கும் உலக மக்களிடம் ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


-ஸ்டார் வெங்கட்.


Comments