நிறுவனங்களுக்கே சென்று தொழிலாளர்களுக்கு சோதனை!!
-MMH
பல்லடம்: பல்லடம் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள்,சாய ஆலைகள்,மில்கள்,விசைத்தறி கூடங்கள் மற்றும் கறிக்கோழி பண்ணைகளில்,ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில்,"தொழிலாளர்கள் பலர், அத்தியாவசிய தேவைகளுக்காக பல்லடம் வந்து செல்கின்றனர். வருபவர்களில் யாருக்கு தொற்று உள்ளது இல்லை என்பது கண்டுபிடிக்க இயலாது. எழுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் அமைத்து, இது வரை,10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரிசோதனை செய்துள்ளோம். தொழில் நிறுவனங்களுக்கே நேரடியாக சென்று, அங்கேயே தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. அறிகுறி கண்டறியப்பட்டதும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது'' என்றார்.
நாளையவரலாறு செய்திக்காக,
-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.
Comments