செய்வாய்க் கிழமை முடி வெட்டலாமா!!

     -MMH


     ஒரு சில தினங்களில் சில செயல்களை செய்யக் கூடாது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு பின் சில முக்கியமான காரணங்களும் உள்ளன. அதன் படி தான் செவ்வாய் கிழமையில் முடி வெட்டக் கூடாது என்பதை நாம் பின்பற்றி வருகிறோம்.


 பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு பல விஷயங்களை கூறிக்கொண்டே இருப்பர். சிலர் அவற்றை காதில் வாங்குவதே கிடையாது. ஏனெனில் மாறி வரும் பழக்கவழக்கங்கள் அப்படி. இரவு நேரங்களில் உப்பு, தயிர் போன்றவற்றை தர கூடாது என்று கூறுவர். ஏனெனில் உப்பு மஹாலட்சுமி போல பாவிக்கபடுவது.  மேலும் நாம் முடிகளை திருத்தும் செய்யும் போது செவ்வாய் கிழமைகளில் செய்யக் கூடாது என்றும் கூறுவர்.
இது ஆன்மீக ரீதியாகவும் கூறப்படுகிறது.அதாவது செவ்வாய் கிழமை லட்சுமி மற்றும் துர்க்கை அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.


  எனவே தான் இந்நாளில் முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் போன்றவற்றை செய்ய கூடாது. ஏனெனில் வீட்டில் இருந்து இருந்து எதையாவது தானம் செய்தால் லட்சுமி சென்று விடுவாள் என்று பண்டைய காலத்தில் இருந்து நம்பி வருகின்றனர்.


  மேலும் எப்படி முடி வெட்டக் கூடாதோ அதே போல் தான் வீட்டை கழுவி விடுவது, வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எரிப்பது அல்லது தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. இப்படி செய்தால் வீட்டில் குடி உள்ள மகாலட்சுமி சென்று விடுவாள் என தொன்றுதொட்டு நம்பிக்கை இருந்து வருகிறது.


-ஸ்டார் வெங்கட்.


Comments