கொலை வழக்கில் மூவர் சிறையிலடைப்பு!!

     -MMH


     கோவை:கோவையில் லேத் பட்டறை உரிமையாளர் கொலையில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் உள்பட மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


     கோவை தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பாக்யலட்சுமி, 45. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், இவரது வீட்டில் குடியிருந்த ஆட்டோ டிரைவர் மைக்கேல்(24), ராகிணி(32), வெண்பா(23) ஆகியோருக்கும் பாக்யலட்சுமி மகன் இளங்கோவன்(27), தொட்டிபாளையத்தை சேர்ந்த சவுந்தர்(23), அருண்(28), கிருபாகரன்(19) இடையே தகராறு ஏற்பட்டது.


     இதில் ஆத்திரம் அடைந்த மைக்கேல், கத்தியால் குத்தி இளங்கோவன் மற்றும் அவருடைய நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுந்தர் உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த மைக்கேல், ராகிணி, வெண்பா ஆகியோரை, பீளமேடு போலீசார் கைது செய்தனர். இதில் மூவரும் கொலை செய்தது உறுதியானது. மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


-சுரேந்தர்,கோவை கிழக்கு.


Comments