பொள்ளாச்சியில் தெரு நாய்களின் அணிவகுப்பு!! - அச்சத்தில் மக்கள்..!

     -MMH


   பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், தெருக்களில் அதிகளவு சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் ரோடு, குமரன் நகர், மகாலிங்கபுரம், ஜோதி நகர், வெங்கடேசா காலனி, பல்லடம் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இதில் பல நாய்கள் வெறி பிடித்து திரிவதால், ரோட்டில் நடந்து செல்வோரையும், வாகனத்தில் செல்வோரையும் விரட்டிச் சென்று கடிக்கிறது.


   கடந்த சில நாட்களுக்கு முன்பு, பல்லடம் ரோடு வழியாக வந்த பைக் முன்பு 3 நாய்கள் உள்ளே புகுந்ததால், பைக்கில் வந்த நபர் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் நகராட்சி பகுதி சாலை வழியாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். தற்போது தெருக்களில் அதிகளவில் நாய்கள் சுற்றி கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-சோலை,சேலம்.


Comments