ஆப்பிள் டீ-சாப்பிடுவது நல்லதா...!

    -MMH


தினமும் ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால் டாக்டரை பார்க்கத் தேவை இல்லையாம் என்று பழமொழி சொல்லுவார்கள். ஆனால் இது முற்றிலும் உண்மை.ஒரு ஆப்பிளில் நமக்குத் தேவையான சத்துக்கள் யாவும் கிடைக்கிறது.இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் எடையும் குறையும் அதே நேரத்தில் உடல் ஆரோக்கியமும் பெரும்.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெறும் ஆப்பிளைச் சாப்பிடுவதை விட ஆப்பிள் டீ சாப்பிடுவது மிகவும் நல்லது.சரி வாங்க ஆப்பிளில் டீ எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம்..


தேவையான பொருள்கள்:
ஆப்பிள்- 1
இஞ்சி- சிறிது
எலுமிச்சை சாறு- 4 ஸ்பூன்
பட்டை பொடி-தேவையான அளவு
டீ பேக்- 1
தேன்- தேவையான அளவு
மிளகு-2 ஸ்பூன்


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இஞ்சி,எலுமிச்சை சாறு,பட்டை பொடி.மிளகு ஆகியவை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.தண்ணீர் ஒரு கப் சுண்டும் அளவிற்குக் கொதிக்க விட வேண்டும்.நன்கு சுண்டிய பிறகு தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.கடைசியில் துருவிய ஆப்பிள் மற்றும் தேனை வடிகட்டிய தண்ணீரில் ஊற்றி ஒரு 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்துத் திறந்து பார்த்தால் ஆப்பிள் டீ ரெடி..


ஆப்பிள் டீயில் உள்ள நன்மைகள்:


ஆப்பிள் டீயில் இயற்கையாகவே விட்டமின் சி சத்து உள்ளது.விட்டமின் சி எந்த வித நோயும் உடலை அண்டாமல் இருக்க உதவுகிறது.தற்பொழுது இருக்கும் கொரோனா காலத்தில் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தால் மட்டுமே கொரோனாவை எதிர்த்துப் போராட முடியும். தினமும் ஆப்பிள் டீயை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.சத்தான உணவுகளைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆதலால் இயற்கை பொருந்திய உணவு வகைகளைச் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்.


-ஸ்டார் வெங்கட்.


Comments